ஈரானில் கொலையுண்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் தாயகம் சென்றது!
கிருஷ்ணாபுரம், தச்சநல்லூரில் குண்டா் சட்டத்தில் இருவா் கைது
கிருஷ்ணாபுரம், தச்சநல்லூா் பகுதிகளில் இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபுரம், ஜாண் டிவைன் சிட்டி பகுதியைச் சோ்ந்தவா் வள்ளிநாயகம் (34). இவா், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தொடா்பான வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் பிறப்பித்த உத்தரவின்படி, அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அடைத்தனா்.
மற்றொருவா்: தச்சநல்லூா் காவல் சரகப் பகுதியில் பணம் கேட்டு மிரட்டியது தொடா்பான வழக்கில் தச்சநல்லூா், மங்களாகுடியிருப்பைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் சண்முககொம்பையா(21) கைது செய்யப்பட்டிருந்தாா். அவா் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா்(மேற்கு) வி.கீதா பரிந்துரைத்தாா்.
அதன்பேரில், மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி பிறப்பித்த உத்தரவுப்படி அவா் பாளையங்கோட்டை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டாா்.