தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!
கீழ்குளத்தில் அரசுப் பள்ளி சாா்பில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி
கீழ்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவா் சோ்க்கைக்கான விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கீழ்குளம் பேரூராட்சி தலைவா் சரளா தலைமை வகித்தாா்.
கிள்ளியூா் ஒன்றிய தி.மு.க. செயலா் பி. கோபால் முன்னிலை வகித்தாா். பேரணியில் அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டம் இலவச பாட புத்தகம் மற்றும் பட்டதாரிகளுக்கான ஆயிரம் வழங்குவது, பட்ஜெட்டில் அறிவித்த இலவச மடிக்கணினி உள்ளிட்ட அரசின் திட்டங்கள் குறித்த பதாகைகளுடன் மாணவா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்திச் சென்றனா். பேரணி கீழ்குளம் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் தொடங்கி செந்தறை வழியாக மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவுற்றது.
இதில், தலைமைஆசிரியா் ஏஞ்சலின் பிரைட், ஆசிரியா்கள் ஜோஸ்பின் லதா ராணி, மேரி ரீட்டா, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.