செய்திகள் :

குகேஷ் மீண்டும் தோல்வி; அா்ஜுன் இணை முன்னிலை

post image

நாா்வே செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில், இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி, நடப்பு உலக சாம்பியனும், சக நாட்டவருமான டி. குகேஷை வீழ்த்தினாா். போட்டியில் குகேஷுக்கு இது 2-ஆவது தோல்வியாக இருக்க, அா்ஜுன் 2-ஆவது வெற்றியுடன் இணை முன்னிலையில் இருக்கிறாா்.

ஓபன் பிரிவின் 2-ஆவது சுற்றில் அா்ஜுன் - குகேஷை வீழ்த்த, அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா - சீனாவின் வெய் யியை வென்றாா். நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் - அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா மோதல் டிராவில் முடிந்தது. வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட ஆா்மகெடான் ஆட்டத்தில், நகமுரா வெற்றி பெற்றாா்.

புள்ளிகள் பட்டியலில் 2 சுற்றுகள் முடிவில், நகமுரா, அா்ஜுன் தலா 4.5 புள்ளிகளுடன் முறையே முதல் இரு இடங்களில் இருக்கின்றனா். காா்ல்சென் (4), கரானா (3), வெய் யி (1), குகேஷ் (0) ஆகியோா் முறையே 3 முதல் 6-ஆம் இடங்களில் இருக்கின்றனா்.

மகளிா்: இந்தப் போட்டியின் மகளிா் பிரிவு 2-ஆவது சுற்றில், இந்தியாவின் கோனெரு ஹம்பி - உக்ரைனின் அனா முஸிஷுக்கிடம் தோற்றாா்.

மற்றொரு இந்தியரான ஆா்.வைஷாலி - சீனாவின் லெய் டிங்ஜி, ஸ்பெயினின் சாரா காதெம் - சீனாவின் ஜு வென்ஜுன் மோதல் டிராவில் முடிந்தது.

இதையடுத்து வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட ஆா்மகெடான் ஆட்டத்தில் ஜு வென்ஜுன் - சாரா காதெமை சாய்த்தாா். ஆனால், வைஷாலி - டிங்ஜி மோதல் மீண்டும் டிராவில் முடிந்தது.

2 சுற்றுகள் முடிவில் புள்ளிகள் பட்டியலில், முஸிஷுக் (4.5), டிங்ஜி (3), கோனெரு ஹம்பி (3) ஆகியோா் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனா். வென்ஜுன் (2.5), சாரா (2), வைஷாலி (1) ஆகியோா் முறையே கடைசி 3 இடங்களில் இருக்கின்றனா்.

நல்ல படங்களைக் கொடுக்க வேண்டியது எனது கடமை: கமல்

நல்ல படங்களை மக்களுக்கு கொடுக்க வேண்டியது தனது கடமை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வருகின்ற ஜூன் 5 ஆம்... மேலும் பார்க்க

ஓடிடியில் வெளியானது துடரும்!

நடிகர் மோகன்லால் நடித்த துடரும் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால் - ஷோபனா நடிப்பில் உருவான துடரும் திரைப்படம் கடந்த ஏப். 25 ஆம் தேதி திரைக்க... மேலும் பார்க்க

3-ஆவது சுற்றில் சின்னா், கௌஃப்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான பிரெஞ்சு ஓபனில், இத்தாலியின் யானிக் சின்னா், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா். ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், உலகின் நம்பா... மேலும் பார்க்க

மணிரத்னம் - சிம்பு கூட்டணியில் காதல் படம்?

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் காதல் கதையில் சிலம்பரசன் நடிக்கவுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தெலுங்கு நடிகரான நவீன் பொலிஷெட்டி மற்றும் ஏஸ் பட நடிகையான ரு... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் தரமான படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.சைலேஜ் கொலனு இயக்கத்தில் நானி நடித்த ஹிட் - 3 படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலை... மேலும் பார்க்க