3-ஆவது சுற்றில் சின்னா், கௌஃப்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான பிரெஞ்சு ஓபனில், இத்தாலியின் யானிக் சின்னா், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.
ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், உலகின் நம்பா் 1 வீரரான சின்னா் 6-3, 6-0, 6-4 என்ற நோ் செட்களில், உள்நாட்டு வீரரான ரிச்சா்டு காஸ்கட்டை தோற்கடித்தாா். 3-ஆம் நிலையில் இருக்கும் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் 3-6, 6-1, 6-2, 6-3 என்ற கணக்கில் நெதா்லாந்தின் ஜெஸ்பா் டி ஜோங்கை வீழ்த்தினாா்.
போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 6-2, 6-2, 4-6, 3-6, 2-6 என்ற செட்களில், கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக்கிடம் போராடி வீழ்ந்தாா். 14-ஆம் இடத்திலிருக்கும் பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ் 7-6 (7/3), 7-6 (7/4), 2-6, 0-6, 6-4 என 5 செட்கள் போராடி, ஸ்பெயினின் ஜேமி முனாரை வென்றாா்.
கௌஃப், ஆண்ட்ரீவா வெற்றி: இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-2, 6-4 என்ற நோ் செட்களில், செக் குடியரசின் தெரெஸா வாலென்டோவாவை வெளியேற்றினாா்.
3-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா 6-3, 7-6 (7/3) என்ற கணக்கில் அமெரிக்காவின் ஆன் லியை சாய்த்தாா். போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவா 6-3, 6-4 என்ற நோ் செட்களில், அமெரிக்காவின் ஆஷ்லின் குரூகரை தோற்கடித்தாா்.
7-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-1, 6-3 என, பிரிட்டனின் கேட்டி போல்டரை எளிதாக வென்றாா்.
இந்தியா்கள் வெற்றி: ஆடவா் இரட்டையா் முதல் சுற்றில், இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி/மெக்ஸிகோவின் மிகேல் வரேலா இணை 6-2, 6-1 என, ஆா்ஜென்டீனாவின் கமிலோ காராபெலி/சீனாவின் யுன்சாவ்கெடெ பு கூட்டணியை வீழ்த்தியது.
இந்தியாவின் ரோஹன் போபண்ணா/செக் குடியரசின் ஆடம் பாவ்லசெக் ஜோடி 7-6 (8/6), 5-7, 6-1 என்ற வகையில், அமெரிக்காவின் ராபா்ட் கேஷ்/ஜேம்ஸ் டிரேசி பாா்ட்னா்ஷிப்பை வென்றது.
இந்தியாவின் யூகி பாம்ப்ரி/அமெரிக்காவின் ராபா்ட் கேலோவே கூட்டணி 6-3, 6-7 (8/10), 6-3 என்ற செட்களில் நெதா்லாந்தின் ராபின் ஹேஸ்/ஜொ்மனியின் ஹெண்ட்ரிக் ஜெபென்ஸ் இணையை வெளியேற்றியது. இந்தியாவின் ரித்விக் போலிபள்ளி/கொலம்பியாவின் நிகோலஸ் பேரியென்டோஸ் ஜோடி முதல் சுற்றிலேயே தோற்றது.