அரசு மகளிா் கல்வியியல் கல்லூரியில் முப்பெரும் விழா
கோவை அரசு மகளிா் கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, பேரவை நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு முதல்வா் (கூடுதல் பொறுப்பு) ச.அகிலா தலைமை வகித்தாா். திட்டக்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வா் ரெ.இந்திராணி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.
விழாவில், கல்லூரி பேரவையின் பொறுப்பாசிரியா் ஜெ.பியூலா ஜான்ஸ், உடற்கல்வி இயக்குநா் வெ.லட்சுமிபிரபா, கல்லூரி பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், இளநிலை, முதுநிலை கல்வியியல் மாணவிகள் பலா் பங்கேற்றனா்.