தேமுதிகவுக்கு அடுத்தாண்டு மாநிலங்களவை சீட்: முன்னாள் அமைச்சர் கே. பி. முனுசாமி
தேமுதிகவுக்கு அடுத்தாண்டு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே. பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே .பி. முனுசாமி இன்று(ஜூன் 1) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
2026-ல் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் வழங்கப்படும். அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக கட்சி தொடர்கிறது.
அதிமுகவுக்கான இரண்டு மாநிலங்களை உறுப்பினர் பதவியில் அதிமுகவினரே போட்டியிடுகின்றனர். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டக் கழக அவைத் தலைவர் தனபால், வழக்குரைஞர் இன்பநிதி ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்று தெரிவித்தார்.