குசால் பெரேரா முதல் டி20 சதம்..! அதிவேக சதமடித்து சாதனை!
நியூசிலாந்துக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இலங்கை வீரர் குசால் பெரேரா தனது முதல் டி20 சதத்தினை அடித்து அசத்தியுள்ளார்.
3ஆவது போட்டியில் முதலில் விளையாடிய இலங்கைஅணி நிரணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 218/5 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக குசால் பெரேரா 101 ரன்களும் கேப்டன் அசலங்கா 46 ரன்களும் எடுத்து அசத்தினார்கள்.
அடுத்து விலையாடிய நியூசிலாந்து அணி 211/7 ரன்கள் எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
இதில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 69 ரன்களும் டேரில் மிட்செல் 37 ரன்களும் எடுத்தனர்.
இந்தப் போட்டியில் தோல்வியுற்றாலும் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என நியூசிலாந்து தொடரைக் கைப்பற்றியது.
இலங்கை வீரர்களில் அதிவேகமாக (44 பந்துகள்) சதமடித்த வீரராக குசால் பெரேரா மாறியுள்ளார். 2025ஆம் ஆண்டின் முதல் சதமாகவும் இவரே இருக்கிறார்.
அதிவேக டி20 சதமடித்த இலங்கை வீரர்கள்
44 பந்துகள் - குசால் பெரேரா (2025)
55 பந்துகள் - திலகரத்னே தில்ஷன் (2011)
63 பந்துகள் - மஹேலே ஜெயவர்தனே (2010)
நியூசி.க்கு எதிராக அதிவேக சதம்
44 பந்துகள் - குசால் பெரேரா (2025)
45 பந்துகள் - ரிச்சர்டு லெவி (2012)
48 பந்துகள் - டேவிட் மலான் (2019)