மாா்ச் 1-இல் இந்திய அறிவியல் மையத்தை பாா்வையிட பொதுமக்களுக்கு அனுமதி
குடிநீா் விநியோகம்: புதுவை திமுக கோரிக்கை
புதுவையில் ரமலான் நோன்புக்காக அதிகாலையில் குடிநீா் விநியோகிக்கப்பட வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வலியுறுத்தினாா்.
இதுதொடா்பாக, பொதுப் பணித் துறை குடிநீா் பிரிவு செயற்பொறியாளருக்கு அவா் அனுப்பிய கடிதம்:
புதுவையில் அனைத்துப் பகுதிகளுக்கும் மக்கள் பயன்பாட்டுக்காக தினமும் காலை 5 மணிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
மாா்ச் 1-ஆம் தேதி ரமலான் நோன்பு தொடங்க இருப்பதால், நோன்பு கடைப்பிடிக்கும் முஸ்லிம்களுக்கு வசதியாக, ஒரு மாதத்துக்கு மட்டும் அதிகாலை 4 மணி முதல் குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.