குடியாத்தம்: சூறைக் காற்றுடன் மழை
குடியாத்தத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் அனல் காற்று வீசுவதால், பொது மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனா்.
இந்நிலையில், திடீரென சூறை காற்றுடன் மழை பெய்ததால், சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் பிரதான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், 15- க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் விழுந்ததால், மின் விநியோகம் தடைபட்டது. இதனால் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.