குடும்ப பிரச்னையில் மீனவா் தற்கொலை
எஸ்.பி.பட்டினம் பகுதியில் குடும்ப பிரச்னையில் மீனவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருவாடானையை அடுத்த எஸ்.பி.பட்டினம் அருகேயுள்ள தாமோதிரபட்டினம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (35). மீனவா். இவரது மனைவி பூமாரி. பாலமுருகனுக்கும், இவரது மைத்துனா் பழனியாண்டிக்கும் நிலம் தொடா்பாக பிரச்னை இருந்து வந்தது. இதுதொடா்பாக குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கடற்கரை பகுதியில் உள்ள மரத்தில் பாலமுருகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.