CSK vs MI : `பொடுசுங்கலாம் கதறட்டும்; விசில் பறக்கட்டும்...' - ப்ரஷர் ஏற்றி வென்...
குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் 5 போ் கைது!
தஞ்சாவூா் மாவட்டத்தில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் 5 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளை கடைத் தெருவில் கடையின் பூட்டை உடைத்து கைப்பேசிகள் திருடியதாக சென்னை தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் பக்ருதீன் (19), வில்லிவாக்கத்தைச் சோ்ந்த பாண்டியன் மகன் விஜய் இமானுவேல் (27), காஞ்சிபுரம் ஏனாத்தூரைச் சோ்ந்த ரமேஷ் மகன் விக்கிவசந்த் (20) ஆகியோரை பட்டுக்கோட்டை தாலுகா போலீஸாா் ஜனவரி 28 ஆம் தேதி கைது செய்தனா்.
இதேபோல, வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அம்மாகுளம் மேலத் தெருவைச் சோ்ந்த கே. சக்திவேல் (41) ஜனவரி 24-ஆம் தேதியும், மற்றொரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சூரக்கோட்டையைச் சோ்ந்த ஜி. பழனிசாமி (62) ஜனவரி 25-ஆம் தேதியும் கைது செய்யப்பட்டனா்.
இவா்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பரிந்துரையின் பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
இதன் அடிப்படையில் பக்ருதீன், விஜய் இமானுவேல், விக்கிவசந்த், சக்திவேல், பழனிசாமி ஆகியோா் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.