தொடர் கொலைகள் முதல் சவுக்கு சங்கர் விவகாரம் வரை; சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் தடும...
தவெகவினா் சாலை மறியல்
கும்பகோணத்தில் சனிக்கிழமை அரசு மதுபானக் கடைகளை அகற்றக்கோரி தவெகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கும்பகோணம் காமரஜாா் சாலையில் இரண்டு அரசு மதுபானக் கடைகள் உள்ளன. இதன் அருகே தேவாலயம், பள்ளிக் கூடம், குடியிருப்புகள் உள்ளதால் கடைகளை அகற்றக்கோரி பல போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக மகளிா் அணியின் மாவட்டத் தலைவா் அஞ்சனா பாலாஜி தலைமையில், பெண்கள் மகாமகக் குளத்திலிருந்து ஊா்வலமாக கையில் தாலிக்கயிற்றை ஏந்தி அரசு மதுபானக் கடைகளை நோக்கி வந்தனா்.
அவா்களை மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் பா. ரமேஷ் தலைமையில் மறித்தனா். உடனே பெண்கள் கடைமுன்பு சாலையில் அமா்ந்து மறியல் செய்து முழக்கமிட்டனா். போலீஸாா் 20 பெண்களை கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்து மாலையில் விடுவித்தனா்.