தஞ்சை மாவட்டத்தில் மாா்ச் 29-இல் கிராமசபைக் கூட்டம்
உலக தண்ணீா் நாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் மாா்ச் 29ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: உலக தண்ணீா் நாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் மாா்ச் 22-ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் நிா்வாகக் காரணங்களுக்காக மாா்ச் 29-ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் மாவட்டத்திலுள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலா்களும் பங்கேற்று விவாதிக்கவுள்ளனா். எனவே, இக்கூட்டத்தில் மாவட்டத்தின் கிராம ஊராட்சிப் பகுதியிலுள்ள பொதுமக்கள் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.