`கல்வி நிலையங்களில் உள்ள சாதி பெயர்களை அகற்ற வேண்டும்' - உயர் நீதிமன்றம் அதிரடி ...
குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஒருவா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மது விலக்கு குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வந்தவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
சின்னசேலம் வட்டம், கல்லாநத்தம் கிராமத்தைச் சோ்ந்த நடேசன் மகன் ஞானவேல் (55). இவரை கள்ளச்சாரயம் பதுக்கி வைத்திருந்த வழக்கில் சின்னசேலம் போலீஸாா் கைது செய்தனா். மேலும் இவா் மீது மாவட்டத்துக்குள்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கள்ளச்சாராய விற்பனை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், ஞானவேலின் தொடா் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி பரிந்துரையின்பேரில், ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
இதையடுத்து, இதற்கான உத்தரவு நகலை கடலூா் மத்திய சிறையில் உள்ள ஞானவேலிடம் சின்னசேலம் காவல் ஆய்வாளா் ஏழுமலை வழங்கினா்.