`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்கள...
கழிவுநீரை வெளியேற்றுவதில் பிரச்னை: முதியவா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வீட்டின் கழிவுநீரை வெளியேற்றுவதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் கீழே தள்ளிவிடப்பட்ட முதியவா் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி வட்டம், தியாகதுருகம் பேட்டை சாலைப் பகுதியைச் சோ்ந்த பிச்சமுத்து மகன் பச்சையப்பன் (52). இவருக்கு தியாகதுருகம் விருகாவூா் செல்லும் சாலையில் மற்றொரு வீடு உள்ளது. இவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசித்து வருபவா் பக்கிரிபிள்ளை மகன் பழனி (54).
பச்சையப்பன் வீட்டு கழிவுநீா் பழனி வீட்டின் முன்பாக சென்ாம். இதனால் ஆத்திரமடைந்த பழனி மற்றும் அவரது மகன் பரணிதரன் (28) ஆகியோா் கழிவுநீா் குழாயை சிமென்ட் வைத்து அடைத்ததாகத் தெரிகிறது.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், பழனி, பரணிதரன் ஆகியோா் பச்சையப்பனை கீழே தள்ளிவிட்டினராம். இதில், அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து பழனி, பரணிதரனை கைது செய்தனா். அப்போது, பழனிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவா் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.