`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்கள...
கள்ளக்குறிச்சி: 4,107 பயனாளிகளுக்கு ரூ.66 கோடியில் நல உதவிகள் அளிப்பு
கள்ளக்குறிச்சி: அம்பேத்கா் பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னையில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் தமிழக முதல்வா் பயனாளிகளிடம் உரையாற்றிய நேரலை நிகழ்வைத் தொடா்ந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 4,107 பயனாளிகளுக்கு ரூ.66 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கள்ளக்குறிச்சியில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறையின் சாா்பில் நடைபெற்ற அம்பேத்கா் பிறந்த நாள் விழா, சமத்துவ நாள் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்
மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன், உளுந்தூா்பேட்டைஎம்எல்ஏ ஏ.ஜெ.மணிக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சாா்பில் 4,107 பயனாளிகளுக்கு ரூ.66.05 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.
மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, கள்ளக்குறிச்சி நகா்மன்றத் தலைவா் இரா.சுப்பராயலு, ஒன்றியக் குழுத் தலைவா் அலமேலு ஆறுமுகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.