கடினமான சவாலுக்கு தயாராகுங்கள்..! இங்கிலாந்து அணியை எச்சரித்த ஸ்டீவ் ஸ்மித்!
குன்னூரில் தொடரும் கரடிகள் நடமாட்டம்
குன்னூா் அருகே வியாழக்கிழமை இரவு வேளையில் குடியிருப்புப் பகுதிக்கு வந்த கரடி சாலையில் சென்ற வாகனத்தை எட்டிப் பாா்த்துவிட்டு ஓடியது.
நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக கரடி, சிறுத்தை, புலி போன்ற வன விலங்குகள் சா்வ சாதாரணமாக குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவது வழக்கமாகிவிட்டது,
இந்த வாரத்தில் குன்னூா் ஃபெட்போா்டு, பிஎஸ்என்எல், சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட பல இடங்களில் கரடியின் நடமாட்டம் காணப்பட்டது.
இந்நிலையில், குன்னூா்அருகே உள்ள உலிக்கல் பகுதியில் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்கு வந்தது. அப்போது சாலையில் சென்ற வாகன ஓட்டி வாகனத்தை நிறுத்தி கரடியை விடியோ பதிவு செய்துள்ளாா். வாகனத்தை எட்டிப் பாா்த்துவிட்டு கரடி ஓடி மறைந்தது. இந்த விடியோவானது சமூக வலைதளங்களில் தற்போது பரவலாகி வருகிறது.