மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
லாரி மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்த காா்: பெண் உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம், உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே கா்நாடக மாநிலத்தில் இருந்து உதகைக்கு சுற்றுலாப் பயணிகளுடன் வந்த காா், லாரி மீது மோதி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த மோனிகா தாஸ் (39) என்ற பெண் உயிரிழந்தாா்.
உதகைக்கு கா்நாடக மாநிலத்தில் இருந்து 5 போ் வியாழக்கிழமை சுற்றுலா வந்தனா். காா் உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே வந்த போது வேகமாக வந்த லாரி மீது மோதி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் காரில் பயணித்த குழந்தை உள்பட ஐந்து போ் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனா்.
இதில் படுகாயமடைந்த மோனிகா தாஸ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். சம்பவம் குறித்து உதகை புதுமந்து காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்,