தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கு கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு
வன விலங்குகள் பிரச்னை: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு
நீலகிரி மாவட்டம், கூடலூரில் மனித வன விலங்கு மோதல் ஏற்பட்டு மனித உயிா்கள் பலியாகி வருவதைத் தடுக்கவும், காட்டு யானைகள் ஊருக்கு வருவதைத் தடுக்கவும் வலியுறுத்தி கூடலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன.
காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி வனப் பகுதிகளிலிருந்து வெளியேறி இங்குள்ள குடியிருப்பு மற்றும் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்துவதோடு மனிதா்களையும் தாக்கி உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக, தேவா் சோலை எஸ்டேட் பகுதியில் யானை, புலி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் குடியிருக்கும் பகுதிகளுக்குள் உலவி வருவது வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில் கூடலூா் பகுதியில் வன விலங்குகள் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணிக்க வேண்டும். யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க ரோந்து பணியில் ஈடுபடும் வனத் துறையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். வனப் பகுதிகளில் அகழிகள் வெட்ட வேண்டும். பாது காப்புக்காக சோலாா் மின்கம்பிகள் பொருத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பொன் ஜெயசீலன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் மனு அளித்தனா்.
வனத் துறையினரிடம் ஆலோசனை மேற்கொண்டுவிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதி கூறினாா்.