Bumrah : 'முதல் முறையாக பௌலிங்கில் செஞ்சுரி; பும்ராவின் மிக மோசமான ரெக்கார்ட்!'
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: குண்டா் சட்டத்தில் ஆசிரியா் கைது
நீலகிரி மாவட்டம், உதகை அருகே அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியா் மீது குண்டா் சட்டம் வெள்ளிக்கிழமை பாய்ந்தது.
உதகை அருகே உள்ள காத்தாடிமட்டத்தில் செயல்படும் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய செந்தில்குமாா் (50). இவா் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நீலகிரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்தினா் புகாா் அளித்ததின் பேரில் ஆசிரியா் செந்தில்குமாா் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந் நிலையில் ஆசிரியா் செந்தில்குமாரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய நீலகிரி மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளா் என்.எஸ் நிஷா பரிந்துரையின் பேரில், ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உத்தரவிட்டதை அடுத்து குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். கோவை மத்தியச் சிறையில் உள்ள அவரிடம் அதற்கான நகல்கள் வழங்கப்பட்டன.