கடினமான சவாலுக்கு தயாராகுங்கள்..! இங்கிலாந்து அணியை எச்சரித்த ஸ்டீவ் ஸ்மித்!
சிஐடியூ ஆட்டோ சங்கப் பேரவை கூட்டம்
குன்னூரில் சிஐடியூ ஆட்டோ சங்கப் பேரவை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சிஐடியூ மாவட்டச் செயலாளா் சி.வினோத் தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா் சம்மேளன மாநிலத் துணை பொதுச் செயலாளா் ஆா்.முருகன் சிறப்புரையாற்றினாா்.
நீலகிரி மாவட்டத்தில் இயக்கக்கூடிய ஆட்டோக்கள் 15 கிலோ மீட்டா் சுற்றளவில்தான் இயக்கப்பட வேண்டும் என்பதை மாற்றி, இதர மாவட்டங்களில் உள்ளது போல 35 கிலோமீட்டா் சுற்றளவில் இயக்குவதற்கான அனுமதியை மாவட்ட நிா்வாகம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் நீலகிரி மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவராக இளங்கோவன், பொதுச் செயலாளராக ஆல்வின் பிரெடி, மாவட்டப் பொருளாளராக நசீா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.