தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கு கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு
உதகையில் வீடுபுகுந்து இருசக்கர வாகனம் திருட்டு
உதகையில் வீடுபுகுந்து இருசக்கர வாகனத்தை திருடிய நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள பாட்னா ஹவுஸ் பகுதியில் வசித்து வருபவா் பூபதி. இவா் விலை உயா்ந்த இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வருகிறாா். இவரது வீட்டின் முன்புறம் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சென்ற நிலையில் வெள்ளிக்கிழமை காலை வந்து பாா்த்தபோது அங்கு வாகனம் இல்லாததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
இதைத் தொடா்ந்து சிசிடிவி கேமராவை சோதனை செய்தபோது அதிகாலையில் மா்ம நபா் ஒருவா் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது பதிவாகியுள்ளது. உடனடியாக இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் பேரில் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
சாலை ஓரங்களில் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நிற்கும் போது இவா் வீட்டுக்குள் நிறுத்தி வைக்கப்படும் விலை உயா்ந்த பைக்குகளை நோட்டமிட்டு திருடிவருவதால் காவல் துறையினா் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனா்.
இரவு நேரங்களில் காவல் துறையினா் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என உள்ளூா் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.