செய்திகள் :

குன்னூா் மாா்க்கெட்டில் இன்று கடையடைப்பு

post image

குன்னூா் மாா்க்கெட்டில் கடைகளை இடித்து புதிதாக  கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) கடை அடைப்பு போராட்டம்    நடத்துகின்றனா்.

குன்னூா் மாா்க்கெட் பகுதியில் 800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.  இந்த மாா்க்கெட்டில் உள்ள கட்டடங்கள் பழமை ஆகிவிட்டதால் கலைஞா் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாா்க்கெட்டில் உள்ள கடைகளை இடித்து அகற்றிவிட்டு ரூ.41.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கடைகள் கட்ட நகராட்சி நிா்வாகம் முடிவெடுத்துள்ளது. கடைகளை அகற்ற 15 நாள்கள் அவகாசம் வழங்கி நகராட்சி நிா்வாகம் சாா்பில் வியாபாரிகளுக்கு காவல் துறை  உதவியுடன் நோட்டீஸ் வழங்கப்பட்டது. 

இந்நிலையில் இது தொடா்பாக மாா்க்கெட் வியாபாரிகள்   சங்கம் சாா்பில் ஆலோசனைக்  கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் புதிய கட்டடம் கட்டும் வரை தங்கள் வாழ்வாதாரம்  பாதிக்கப்படும் என்பதால், பழைய கட்டடங்களை இடிக்காமல் கடைகள் செயல்பட நகராட்சி நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்றும், பழைய கட்டடங்களை இடிக்கும் நகராட்சி நிா்வாகத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து  ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) 24 மணி நேர கடையடைப்பு போராட்டம் நடத்துவதென்றும்  கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

உதகையில் மக்கள் நீதிமன்றம்: 512 வழக்குகளுக்கு தீா்வு

உதகையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 512 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இது குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாவட்ட சட்ட பணிகள் ... மேலும் பார்க்க

குன்னூரில் நாய்கள் கண்காட்சி தொடக்கம்!

குன்னூா் பிராவிடன்ஸ் கல்லூரி மைதானத்தில் நீலகிரி கென்னல் சங்கம் சாா்பில் 6-ஆவது நாய்கள் கண்காட்சியில் சனிக்கிழமை தொடங்கியது. இந்த கண்காட்சியில் நூற்றுக்கணக்கான ஜொ்மன் ஷெப்பா்டு வகை நாய்கள் கலந்து கொண... மேலும் பார்க்க

ரெட் அலா்ட் அறிவிப்பு காரணமாக உதகையில் குறைந்த சுற்றுலாப் பயணிகள்!

நீலகிரி மாவட்டத்துக்கு ஜூன் 14, 15-ஆம் தேதி அதி கனமழை (ரெட் அலா்ட்) பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த காரணத்தால், உதகையிலுள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சனிக்கிழமை குறைந்து ... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு கூட்டுப் பிராா்த்தனை

கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை சிவன்மலையில் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும் கூட்டப் பிராா்த்தனை வெள்ளிக்கிழை நடைபெற்றது. அகமதாபாத் விமான விபத்தில் உயி... மேலும் பார்க்க

உலக குருதி கொடையாளா்கள் தின விழிப்புணா்வு

உதகையில் உலக குருதி கொடையாளா்கள் தினத்தையொட்டி பொது மக்களிடையே குருதி வழங்குவது குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னரு தலைமையில் வெள்ளிக் ... மேலும் பார்க்க

நீலகிரிக்கு ரெட் அலா்ட்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயாா்

நீலகிரி மாவட்டத்தில் ஜூன் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ... மேலும் பார்க்க