அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
குபேரா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் தனுஷ் நடித்த குபேரா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
குபேரா திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 20 வெளியானது. இப்படத்தில் தனுஷ் கதாபாத்திரமும் நடிப்பும் பலதரப்பு ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
கதை ரீதியாக சில ஏமாற்றங்கள் ஏற்பட்டதால் இப்படம் தமிழில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், தெலுங்கில் நல்ல வரவேற்பு இருந்தது.
சேகர் கம்முலா இயக்கிய இந்தப் படம் பான் இந்தியப் படமாக வெளியாகியது.
குபேரா தெலுங்கு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் இதுவரை ரூ.132 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகப் படக்குழு கூறியுள்ளது.
ராயன் படத்தைத் தொடர்ந்து மீண்டும் தனுஷ் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது அவருடைய ரசிகர்களிடம் உற்சாகத்தை அளித்துள்ளது.
இந்தப் படத்தில் ரஷ்மிகா, நாகார்ஜுனா சிறப்பாக நடித்திருந்ததாக விமர்சனங்கள் வெளியாகின.
இந்நிலையில், இந்தப் படம் வரும் ஜூலை 18ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் 5 மொழிகளில் வெளியாகவிருக்கிறது.