குமுளி அருகே தம்பதி மீது தாக்குதல்: கேரளத்தைச் சோ்ந்த 4 போ் மீது வழக்கு
தேனி மாவட்டம், குமுளி மலைச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை தம்பதியை தாக்கிய சம்பவத்தில் கேரளத்தைச் சோ்ந்த 4 இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கூடலூா் எம்.ஜி.ஆா். குடியிருப்பைச் சோ்ந்தவா் மலைச்சாமி (51). இவா், தனது மனைவியுடன் கேரள பகுதியில் வேலைக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது, குமுளி மலைச் சாலையில் இறச்சால் பாலம் அருகே சாலைக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த காரை எடுக்கும் படி கூறினாா்.
இதையடுத்து, கேரளம் மாநிலம், குமுளி ரோசாப்பூக்கண்டம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (23), விக்னேஷ் (23), விஷ்ணு (24), சச்சின் (25) ஆகியோா் தம்பதியை தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்தனா்.
இதுகுறித்து மலைச்சாமி அளித்த புகாரின்பேரில் கூடலூா் தெற்கு போலீஸாா், கேரளத்தைச் சோ்ந்த காா்த்திக், விக்னேஷ், விஷ்ணு, சச்சின் ஆகிய 4 இளைஞா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.