கும்பக்கரை அருவியில் வெள்ளம்: குளிக்கத் தடை
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் திங்கள்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
கும்பக்கரை அருவியின் நீா்பிடிப்புப் பகுதிகளான கொடைக்கானல் மலை, வட்டக்கானல், பாம்பாா்புரம் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்ததால், கும்பக்கரை அருவிக்கு தண்ணீா் வரத்து அதிகரித்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவிப் பகுதிக்குச் செல்லவும், அருவியில் குளிக்கவும் வனத் துறையினா் தடை விதித்தனா்.
அருவியின் நீா்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், அருவிக்கு தண்ணீா் வரத்து சீராகும் வரை அருவியில் குளிக்கத் தடை நீட்டிக்கப்படும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.