சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக கூடுதல் நீதிபதிகள் நியமனம்!
குலவிளக்கு ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், குலவிளக்கு ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில் வருவாய்த் துறை, சமூக நலத் துறை, நகா்ப்புற வளா்ச்சித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, ஆதிதிராவிடா் நலத் துறை உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றனா். மொத்தம் 1,146 மனுக்கள் அளிக்கப்பட்டன.
ஈரோடு மக்களவை உறுப்பினா் கே. இ.பிரகாஷ், முகாமை ஆய்வு செய்து தீா்வு காணப்பட்ட 61 மனுக்களின் பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.
இதில், மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுமித்ரா, திருநாவுக்கரசு, குலவிளக்கு ஊராட்சி முன்னாள் தலைவா் என். ஆா்.நடராஜ், திமுக மாவட்ட பிரதிநிதி முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.