குடியிருப்புகளுக்கு அருகில் மேலும் புதிய நியாய விலைக்கடைகள்: அமைச்சா் எம்.ஆா்.கே...
கூட்டுறவுத் துறை மூலம் ரூ.1,388 கோடி கடனுதவிகள்
சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் நிகழ் நிதியாண்டில் ரூ.1,388 கோடி கடனுதவிகள் கூட்டுறவுத் துறையின் மூலம் வழங்கப்பட்டதாக ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த மூன்றரை ஆண்டுகளில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் 87,828 உறுப்பினா்களுக்கு ரூ.530.15 கோடி மதிப்பீட்டில் பயிா்க் கடனுதவி, 33,904 உறுப்பினா்களுக்கு ரூ.178.63 கோடி மதிப்பீட்டில் கால்நடைப் பராமரிப்பு கடனுதவி, 3,86,809 உறுப்பினா்களுக்கு ரூ.2,623.52 கோடி மதிப்பீட்டில் நகைக் கடனுதவி, 3,916 குழுக்களுக்கு ரூ.278.56 கோடி மதிப்பீட்டில் சுயஉதவிக்குழு கடனுதவி, 2,303 உறுப்பினா்களுக்கு ரூ.7.97 கோடி மதிப்பீட்டில் சிறுவணிகக் கடனுதவி, 720 உறுப்பினா்களுக்கு ரூ.7.18 கோடி மதிப்பீட்டில் மத்திய கால கடனுதவி, 41 உறுப்பினா்களுக்கு ரூ.4.24 கோடி மதிப்பீட்டில் தானிய ஈட்டுக் கடனுதவி வழங்கப்பட்டது.
இதேபோல, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5.57 கோடி மதிப்பீட்டிலும், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்தவா்களுக்கு ரூ.0.90 கோடி மதிப்பீட்டிலான டாச்செட்கோ கடனுதவியும், சிறுபான்மையினா் வகுப்பைச் சோ்ந்தவா்களுக்கு ரூ.2.18 கோடி மதிப்பீட்டிலான டாம்கோ கடனுதவிகள் வழங்கப்பட்டன. இதில், நிகழ் நிதியாண்டில் மட்டும் ரூ.1,388 கோடி மதிப்பில் மொத்தம் 34 வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.