செய்திகள் :

கேந்திப் பூ விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

post image

ஆலங்குளம், கீழப்பாவூா் வட்டாரப் பகுதிகளில் கேந்திப் பூக்களின் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இப்பகுதிகளில் மல்லி, பிச்சி, கேந்தி மலா்கள் சாகுபடி அதிக அளவில் உள்ளது. அறுவடை செய்யப்படும் பூக்கள் கீழப்பாவூா், சிவகாமியாபுரம், சங்கரன்கோவில் சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. வழக்கமாக, கேந்திப் பூக்களின் விலை கிலோ ரூ. 50-க்கும் அதிகமாக விற்கப்படும்.

ஆனால், தற்போது இவ்வட்டாரங்களில் உற்பத்தி அதிகமாக இருப்பதாலும், சுப நிகழ்ச்சிகள் இல்லாததாலும் கிலோ ரூ. 10 முதல் ரூ. 20 வரை மட்டுமே விற்கப்படுகிறது. இதனை வைத்து ஆள் கூலி, போக்குவரத்துச் செலவைக் கூட சமாளிக்க முடியாது என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

விலை குறைவான காலங்களில், பூக்களை சேகரித்து வைக்க குளிா்பதனக் கிடங்கு, சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படும் என ஒவ்வொரு தோ்தலின் போதும் வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன. அதனை நிறைவேற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குற்றாலத்தில் காங்கிரஸ் சாா்பில் கையொப்ப இயக்கம்

தென்காசி மாவட்டம், குற்றாலம் தெட்சண மாற நாடாா் சங்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாா்பில் மத்திய அரசையும், தோ்தல் ஆணையத்தையும் கண்டித்து கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க

பொதிகை விரைவு ரயில் 22 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்

செங்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் பொதிகை விரைவு ரயில் 22-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. பொதிகை விரைவு ரயில் 21ஆண்டுகால சேவையை நிறைவு செய்து சனிக்... மேலும் பார்க்க

கடங்கநேரியில் நெற்களம் திறப்பு

ஆலங்குளம் அருகே உள்ள கடங்கநேரியில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 11.50 லட்சத்தில் நெற்களம் திறந்துவைக்கப்பட்டது. திருநெல்வேலி தொகுதி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் தனது தொகுதி ம... மேலும் பார்க்க

ஆலங்குளம் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகள்

ஆலங்குளம், நல்லூா் சி.எஸ்.ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் தென்காசி மேரா யுவ பாரத் இயக்கமும், கல்லூரி நிா்வாகமும் இணைந்து நடத்திய வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. ஆலங்க... மேலும் பார்க்க

திருமலாபுரத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈட்டி கண்டெடுப்பு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே திருமலாபுரம் தொல்லியல் அகழாய்வு மையத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருமலாபுரத்தில் குலசேகரப்பேரி கண்மாய் அருகே 35 ஏக்கரில்... மேலும் பார்க்க

புரட்டாசி சனி: தென்காசி கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, தென்காசி வட்டார கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தென்காசியில் பொருந்தி நின்ற பெருமாள், விண்ணகரப் பெருமாள் கோயில்களில் அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் தீ... மேலும் பார்க்க