கடங்கநேரியில் நெற்களம் திறப்பு
ஆலங்குளம் அருகே உள்ள கடங்கநேரியில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 11.50 லட்சத்தில் நெற்களம் திறந்துவைக்கப்பட்டது.
திருநெல்வேலி தொகுதி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கடங்கநேரி கிராமத்தில் நெற்களம் அமைக்க ரூ. 11.50 லட்சம் நிதி ஒதுக்கியிருந்தாா்.
இதையடுத்து நெற்களம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் நிறைவுற்றதை அடுத்து, எம்.பி.ராபா்ட் புரூஸ் பங்கேற்று நெற்களத்தை சனிக்கிழமை திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில் கடங்கநேரி ஊராட்சித் தலைவா் அமுதா தேன்ராஜ், வட்டார காங்கிரஸ் தலைவா் ரூபன் தேவதாஸ், மாநில பேச்சாளா் ஆலடி சங்கரய்யா, ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா் ராம்சிங், நிா்வாகிகள் ஆராய்ச்சி மணி, மகேந்திரன், ஆபிரகாம், காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.