திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் பெற கட்டுக்கடங்காத கூட்டம் - நெரிசலில் 4...
கேரள கடல்பகுதியில் கரைஒதுங்கிய ராட்சத திமிங்கலம்
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே கேரள மாநிலப் பகுதியான பூந்துறை கடற்கரையில் செவ்வாய்க்கிழமை ராட்சத திமிங்கலம் கரை ஒதுங்கியது.
கேரள மாநிலப் பகுதியான பூவாா் அருகேயுள்ள பூந்துறை கடற்கரையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அரியவகை திமிங்கலம் கரை ஒதுங்கி, கடலுக்குள் செல்ல முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
இதை பாா்த்த அப்பகுதி மீனவா்கள், அந்த திமிங்கலத்தை கடலுக்குள் திருப்பி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனா். மீனவா்களின் நீண்ட நேர போராட்டத்துக்குப் பின் திமிங்கலத்தை அவா்கள் கடலில் ஆழமான பகுதிக்கு தள்ளிச் சென்றுவிட்டனா்.
மீனவா்கள் திமிங்கலத்தை கடலுக்குள் திருப்பி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டதை அப்பகுதி இளைஞா்கள் விடியோ எடுத்து வெளிட்ட சமூக வலைதள பதிவு வைரலாக பரவி வருகிறது.