எடப்பாடி - Amit Shah சந்திப்பு: செங்கோட்டையன் அடுத்த மூவ்? | Va Pugazhendhi Inte...
கொடைக்கானலில் பலத்த மழை: நீரோடைகளில் நீா்வரத்து அதிகரிப்பு
கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால் நீரோடைகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வெள்ளிநீா் அருவி, செண்பகா அருவி, பாம்பாா் அருவி, பெப்பா் அருவி, பேரிசோழா அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் தண்ணீா் வரத்து தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், புதன்கிழமை காலை முதல் மதியம் வரை மிதமான வெப்பம் நிலவியது. பின்னா், கொடைக்கானல், அப்சா்வேட்டரி, பாக்கியபுரம், சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், பெருமாள்மலை, செண்பகனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் இரண்டு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
இந்த மழையால் அனைத்து நீரோடைகளிலும் நீா்வரத்து அதிகரித்து காணப்படுகின்றன. இதனால், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.