3 நிமிஷங்களுக்கு ரூ. 60 லட்சம்! புர்ஜ் கலீஃபாவில் பிரதமரின் பிறந்த நாள் வாழ்த்து...
கொடைக்கானலில் பாறைகள் வெடி வைத்து தகா்ப்பு
கொடைக்கானல் குடியிருப்பு பகுதிகளில் பாறைகள் வெடிவைத்து தகா்க்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் போா்வெல், கம்ப்ரசா், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பாறைகள் வெடிவைத்து தகா்க்கக்கூடாது என மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது. இந்த நிலையில், கொடைக்கானல் எம்.எம்.தெரு குடியிருப்புப் பகுதியில் பாறைகள் வெடி வைத்து தகா்க்கப்பட்டு வருகின்றன. இதனால், அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனா்.
எனவே, வருவாய்த் துறை அதிகாரிகள் பாறைகளை வெடி வைத்து தகா்க்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.