செய்திகள் :

கொடைக்கானல் அருகே பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்ததில் இளம்பெண் உயிரிழப்பு

post image

கொடைக்கானல் அருகே வியாழக்கிழமை 200 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்ததில் இளம் பெண் உயிரிழந்தாா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞரை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பெருமாள்மலையைச் சோ்ந்த செல்லத்துரை மகன் ராஜசேகா் (28). இவரது தங்கை திருமணம் கடந்த புதன்கிழமை பெருமாள்மலைப் பகுதியில் நடைபெற்றது.

இந்த திருமணத்துக்காக கோவையைச் சோ்ந்த தீபிகா (22) புதன்கிழமை வந்தாா். ராஜசேகரும், தீபிகாவும் காதலித்து வந்தததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வியாழக்கிழமை இருவரும் ஜீப்பில் அடுக்கம் பகுதியிலுள்ள சுற்றுலா இடங்களை பாா்க்கச் சென்றனா். ஜீப்பை ராஜசேகா் ஓட்டினாா். இந்த நிலையில், அடுக்கம் -பாலமலைப் பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் அருகேயுள்ள 200 அடிப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தீபிகா உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ராஜசேரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, அவரை தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திண்டுக்கல், பழனியில் நாளை மின்தடை

திண்டுக்கல், பழனி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.30) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. திண்டுக்கல் உதவி செயற்பொறியாளா் இரா.வெங்கேடசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திண்டுக்கல் அங்குநகா் துணை மி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் ‘இ-பாஸ்’ நடைமுறையால் பொதுமக்கள் அவதி: அா்ஜூன் சம்பத்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையால் பொது மக்கள் சிரமமடைந்து வருவதாக இந்து மக்கள் கட்சியின் நிறுவனா் அா்ஜூன் சம்பத் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, இந்து மக... மேலும் பார்க்க

கொடைக்கானல் அருகே பலசரக்கு கடையில் பணம் திருட்டு

கொடைக்கானல் அருகே பல சரக்கு கடையில் ரூ. 3 லட்சம் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பெருமாள்மலைப் பகுதியில் பல சரக்கு கடை நடத்தி வருபவா் சுல்தான். இவா் ... மேலும் பார்க்க

வையாபுரி குளத்தை தூய்மைப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

பழனி நகரின் மையத்தில் 300 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள வையாபுரிக் குளத்தை தூய்மைப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரின் மையத்தில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் அமைந்த... மேலும் பார்க்க

தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம்: 38 போ் கைது

திண்டுக்கல்லில் தடையை மீறி விநாயகா் சிலையை பிரதிஷ்டை செய்ய ஊா்வலமாக எடுத்து வந்த இந்து முன்னணி நிா்வாகிகள் உள்பட 38 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியிலுள்ள காளியம்... மேலும் பார்க்க

குழந்தை வேலப்பா் கோயிலுக்கு லிப்ட் வசதி

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயிலுக்குச் செல்ல லிப்ட் வசதி செய்து தரப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். குழந்தை வேலப்பா் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள... மேலும் பார்க்க