Arundhati roy: ``தேசியவாதிகள் 99% பேர் இப்படித்தான் இருக்கிறார்கள்'' - அருந்ததி ...
திண்டுக்கல், பழனியில் நாளை மின்தடை
திண்டுக்கல், பழனி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.30) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் உதவி செயற்பொறியாளா் இரா.வெங்கேடசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திண்டுக்கல் அங்குநகா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக திண்டுக்கல் நகா், செட்டிநாயக்கன்பட்டி, குரும்பப்பட்டி, பொன்மாந்துறை, விராலிப்பட்டி, நந்தவனப்பட்டி, என்.எஸ்.நகா், ரோஜாநகா், இ.பி.காலனி, அங்குநகா் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
பழனி: பழனி மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பழனி நகா், சிவகிரிப்பட்டி, கலிக்கநாயக்கன்பட்டி, கோதைமங்கலம், புளியம்பட்டி, தும்பலப்பட்டி, பாறைப்பட்டி, கேஜி வலசு, பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி, ஆயக்குடி, சின்னக்கலையம்புத்தூா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.