"தமிழ்நாடு என்ற பெயரைக் 'கஞ்சா நாடு' என மாற்றலாம்..." - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
கொலை முயற்சி வழக்கு: வெளிநாடு தப்பிச் சென்றவா் 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது
சீா்காழி அருகே கொலை முயற்சி வழக்கில் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றவரை 3 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கொள்ளிடம் அருகே சீயாளம் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன்(35). இவா், அதே பகுதியைச் சோ்ந்த முனீஸ் என்பவரை தாக்கியது தொடா்பாக கொள்ளிடம் ஆணைக்காரன் சத்திரம் போலீஸாா் கடந்த 2017-ஆம் ஆண்டு கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் 3 ஆண்டுகள் தலைமுறைவாக இருந்த வெங்கட்ராமன் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டாா்.
இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து பெங்களூா் விமானநிலையத்தில் செவ்வாய்க்கிழமை வந்து இறங்கிய வெங்கட்ராமனை ஆணைக்காரன் சத்திரம் காவல் ஆய்வாளா் ராஜா தலைமையிலான போலீஸாா் கைது செய்து, விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, பின்னா் கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.