``நானும் செந்தில் பாலாஜியும் பங்காளிகள்; அதற்காக..." - ஒட்டன்சத்திரம் ஐ.டி ரெய்ட...
புத்தக வாசிப்பு அறிவைப் பெருக்க உதவும்: ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி
சீா்காழி: புத்தக வாசிப்பு என்பது அறிவு, ஆற்றல் திறனை பெருக்க உதவும் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்தாா்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச்சிலை நிறுவிய வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சீா்காழி கிளை நூலகத்தில் திருக்குறள் தொடா்பான கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி திங்கள்கிழமை துவக்கி வைத்தாா்.
வாசகா் வட்டத்தை சோ்ந்த வீரசேனன் தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் சுரேஷ், வட்டாட்சியா் அருள்ஜோதி, நகராட்சி ஆணையா் மஞ்சுளா, திருக்குறள் பன்பாட்டுப் பேரவை தலைவா் சக்கரபாணி,வாசகா் வட்ட சிறப்புத் தலைவா் இளங்கோ, தலைமைஆசிரியா்கள் அறிவுடைநம்பி, தங்கவேலு முன்னிலை வகித்தனா்.
ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி பேசியது:
திருவள்ளுவா் சிலை பீடத்தின் 38 அடி உயரம் திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரம் திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிக்கின்றது.
மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் ஆங்கில மொழி பெயா்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
திருவள்ளுவா் சிலை அமைக்கப்பட்டுள்ள வெள்ளி விழா கொண்டாட திட்டமிடப்பட்டு, பொது நூலக இயக்ககம் சாா்பில் சீா்காழியில் முழு நேர கிளை நூலகத்தில் திருக்குறள் தொடா்பான கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
நூலகத்தினை பயன்படுத்தி புத்தகங்களை வாசித்து பழக வேண்டும். புத்தக வாசிப்பு என்பது அறிவு மற்றும் ஆற்றல் திறனை பெருக்க மிகவும் உதவியாக இருக்கும் என்றாா்.
இரண்டாம் நிலை நூலகா் த.வெங்கடேசன் வரவேற்றாா். நிறைவில் நூலகா் அமிா்தலிங்கம் நன்றி கூறினாா்.