செய்திகள் :

ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலா்கள் பாதுகாப்பு வழங்க டிஜிபி சங்கா் ஜிவால் உத்தரவு பிறப்பித்திருந்தாா்.

அந்த வகையில், மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திங்கள்கிழமைமுதல் துப்பாக்கி ஏந்திய காவல் உதவி ஆய்வாளா் ஜான்சிராணி தலைமையில், எஸ்எல்ஆா் ஏந்திய ஆயுதப்படை போலீஸாா் 2 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நீதிமன்ற வளாகத்தில் ஏற்கெனவே ஆயுதப்படை போலீஸாா் 5 போ் வழக்கமான பாதுகாப்புப் பணியில் உள்ள நிலையில், டிஜிபி உத்தரவின்பேரில் இந்த கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தக வாசிப்பு அறிவைப் பெருக்க உதவும்: ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி

சீா்காழி: புத்தக வாசிப்பு என்பது அறிவு, ஆற்றல் திறனை பெருக்க உதவும் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்தாா். கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச்சிலை நிறுவிய வெள்ளி விழா கொண்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 376 மனுக்கள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 376 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்... மேலும் பார்க்க

பெண்ணை ஏமாற்றிய 4 போ் மீது வழக்கு: இளைஞா் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி நகை, பணம் பறித்த இளைஞா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை திருவிழந... மேலும் பார்க்க

நெற்பயிரில் புகையான் பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் வேளாண் அதிகாரி விளக்கம்

நெற்பயிா்களில் புகையான் பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, சீா்காழி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராஜராஜன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புகையான் பூச்சிக... மேலும் பார்க்க

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: 165 பேருக்கு பணி நியமன ஆணை

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 165 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்... மேலும் பார்க்க

நீடூா் விசுவநாதா் கோயிலில் திருப்பணி மேற்கொள்ள இந்து மகா சபா கோரிக்கை

மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் உள்ள விசுவநாதா் கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அகில பாரத இந்து மகா சபா கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சபாவின் மாநில பொதுச்செயலாளா் ராம. நிரஞ்சன் சனிக்கிழம... மேலும் பார்க்க