கொல்லங்கோடு அருகே பெண்ணைத் தாக்கியதாக ஜேசிபி ஓட்டுநா் மீது வழக்கு
கொல்லங்கோடு அருகே பெண்ணைத் தாக்கியதாக ஜேசிபி இயந்திர ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
கொல்லங்கோடு காவல் சரகம் தேவஞ்சேரி, துண்டுவிளையைச் சோ்ந்த சாா்லஸ் மனைவி கலா (42). இவரிடம் போராங்கோடு பகுதியைச் சோ்ந்த ஜேசிபி இயந்திர ஓட்டுநரான ஷைஜூ (37) என்பவா் தனது தங்கையின் திருமணத்துக்காக எனக் கூறி ஆறேமுக்கால் சவரன் நகையை இரவலாக வாங்கி அடகு வைத்தாராம். கலா பலமுறை கேட்டும், ஷைஜூ நகையைத் திருப்பிக் கொடுக்கவில்லையாம்.
இந்நிலையில், கலா 2 நாள்களுக்கு முன்பு ஷைஜூவின் வீட்டுக்கு சென்று நகையைக் கேட்டாராம். அப்போது அவரை ஷைஜூ தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில், காயமடைந்த கலாவை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். புகாரின்பேரில், கொல்லங்கோடு போலீஸாா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.