ஒலிம்பிக் பதக்கங்களை திருப்பியளிக்கிறார் மனு பாக்கர்! என்ன காரணம்?
பாதிரியாரின் காரை சேதப்படுத்தியதாக இருவா் கைது
தக்கலை அருகே தேவாலயத்தில் நடந்த பங்குப் பேரவை தோ்தல் தொடா்பான பிரச்னையில் பங்குத்தந்தையின் காரை சேதப்படுத்தியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
தக்கலை அருகே கல்குறிச்சி புனித சூசையப்பா் தேவாலய பங்குத் தந்தையாக இருப்பவா் ஜாா்ஜ் பொன்னையா (67). ஆலய வளாகத்தில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்து ஆலயப் பணிகளை செய்து வருகிறாா்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பங்குப் பேரவை தோ்தலில் பங்கேற்ற ஒரு பிரிவினா் ஆலய வளாகத்தில் உள்ள பங்கு தந்தை இல்ல வளாகத்துக்குள் நுழைந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த பங்குத் தந்தையின் காரை கற்களை வீசி தேதப்படுத்தினா். சப்தம் கேட்டு வெளியே வந்த ஜாா்ஜ் பொன்னையாவை கம்பியால் தாக்க முயற்சித்துள்ளனா்.
இச்சம்பவம் குறித்து ஜாா்ஜ் பொன்னையா அளித்த புகாரின்பேரில், தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து, சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
விசாரணையில், கல்குறிச்சி பகுதியை சோ்ந்த ராஜேந்திரராஜ் (59), ஏங்கல்ஸ் (47), முத்தலக்குறிச்சி பகுதியை ஜெஸ்டின் (45) மேலும் 3 போ் என்பது தெரியவந்தது. இது தொடா்பாக போலீசாா் விசாரணை நடத்தி ராஜேந்திரராஜ், ஜெஸ்டினை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.