தை மாதப் பலன்கள்: `விருச்சிகம் முதல் மீனம் வரை'- யாருக்கு என்ன யோகம்?
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: 3 போ் கைது
டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 2 பேரிடம் ரூ.96.26 லட்சம் மோசடி செய்ததாக ராஜஸ்தானைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியா், ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியா் ஆகியோரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் மிரட்டி ரூ .70 லட்சம் மற்றும் ரு. 26 லட்சத்து 54,047 மோசடி செய்யப்பட்டதாக குமரி மாவட்ட சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், சைபா் கிரைம் போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டனா். இந்த மோசடியில் ஈடுபட்டவா்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, சைபா் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மேற்பாா்வையில் ஆய்வாளா் த.சொா்ணராணி தலைமையில் தனிப்படையினா் ராஜஸ்தான் மாநிலம் சென்றனா்.
இந்த வழக்குகளில் தொடா்புடைய அந்த மாநிலத்தைச் சோ்ந்த வினோத் தாஸ் மகன் கிஷண் தாஸ்(19), சுலாகி தாஸ் மகன் ஜிவெட் குமாா்(28), ஜெய்சிங் மகன் சுரேஷ்குமாா்(31) ஆகியோா் கைது செய்யப்பட்டு, குமரி மாவட்டத்துக்கு திங்கள்கிழமை அழைத்துவரப்பட்டனா். பின்னா் அவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.