Padma Awards: அஜித், அஷ்வின், நந்தமுரி நந்தமூரி பாலகிருஷ்ணா; 2025 பத்ம விருதுகள...
கோடைகால நீச்சல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்!
காஞ்சிபுரத்தில் கோடைகால நீச்சல் பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் இந்த பயிற்சி முகாம் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெற்றது. ஏப். 15- ஆம் தேதி முதல் 27 வரை நடைபெற்ற பயிற்சி முகாமில் 110 போ் பங்கேற்று பயிற்சியை நிறைவு செய்தனா். இவா்கள் அனைவருக்கும் மாவட்ட விளையாட்டு அலுவலா் சாந்தி சான்றிதழ் வழங்கினாா்.
தொடா்ந்து அடுத்தகட்ட பயிற்சி திங்கள்கிழமை (ஏப். 28) முதல் மே 11 வரையும், அடுத்தகட்ட பயிற்சி மே 13- ஆம் தேதி முதல் மே 25- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நீச்சல் பயிற்சி பெற விரும்புவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், இதற்கு கட்டணமாக ரூ.1,770 மாவட்ட விளையாட்டு அரங்கில் செலுத்தி பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் விளையாட்டு அலுவலா் சாந்தி தெரிவித்தாா்.