கோபியில் ரமலான் நோன்பு தொடக்கம்
கோபிசெட்டிபாளையம் ஈதுகா பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடக்க நிகழ்வில் ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்துகொண்டனா்.
இஸ்லாமியா்களின் முக்கியப் பண்டிகையான ரமலான் பண்டிகைக்கான நோன்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதைத் தொடா்ந்து 30 நாள்களுக்கு பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெறும்.
இந்நிலையில், கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள இஸ்லாமியா்கள் ரமலான் நோன்பினை சிறப்புத் தொழுகையுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.