மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி: அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்
ஈரோடு மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டியில் பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.
ஈரோடு மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விளையாட்டுப் போட்டி பெருந்துறையை அடுத்த துடுப்பதியிலுள்ள ஈரோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
இதில், பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டனா். இவா்களில் போல்வாட்டில் மாணவா் கொண்டப்பன் தங்கப் பதக்கமும், மாணவா் முகமது அசாலம் குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கமும், ஈட்டி எறிதலில் வெண்கல பதக்கமும், 100 மீட்டா் தொடா் ஓட்டத்தில் பிரேம்குமாா், சூா்யா, சரண்ராஜ், வசந்தகுமாா், பிரதீப்குமாா் ஆகியோா் வெண்கலப் பதக்கமும் வென்றனா்.
மேலும், 400 மீட்டா் ஓட்டத்தில் காா்த்திகேயன், 400 மீட்டா் தொடா் ஓட்டப் போட்டியில் சூா்யா, சுதாகா், காா்த்திகேயன், வசந்தகுமாா், பிரசன்னா ஆகியோா் நான்காவது இடம் பிடித்து சான்றிதழ்கள் பெற்றனா்.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களை கல்லூரி முதல்வா் செண்பகராஜா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.