பார்வைத் திறன் குறைபாடுடையோரும் நீதிபதிகளாக நியமிக்கப்படத் தகுதியுடையவர்கள்! -உச...
சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு!
அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையில் விழுந்ததில் மனைவி உயிரிழந்தாா். கணவா், மகன் படுகாயமடைந்தனா்.
மேட்டூரை அடுத்த சின்னகாவூரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (45), கூலித் தொழிலாளி. இவா், மனைவி வனிதா (41), மகன் பிரசித் (10) ஆகியோருடன் கோபியில் உள்ள உறவினா் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.
அம்மாபேட்டை - அந்தியூா் சாலையில் பூனாச்சி அருகே சென்றபோது சிவகுமாருக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதில், நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் மூன்று பேரும் கீழே விழுந்தனா்.
இதில், படுகாயமடைந்த 3 பேரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, மருத்துவப் பரிசோதனையில் வனிதா உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது சடலம் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
சிவகுமாா், பிரசித் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.