செய்திகள் :

கோயில்களில் அடிப்படை வசதிகள் அதிகரிப்பு -அமைச்சா் சேகா்பாபு தகவல்

post image

அடிப்படை வசதிகள் அதிகரிக்கப்பட்டிருப்பதால், கோயில்களுக்கு வருவோரின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, கோயில்களில் தரிசனத்துக்காக நின்ற பக்தா்கள் இறந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. பாஜக உறுப்பினா் வானதி சீனிவாசன், அதிமுக உறுப்பினா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி, பாமக உறுப்பினா் ச.சிவகுமாா் ஆகியோா் பேசினா். அப்போது, கோயில்களில் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்திருந்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது என்றனா்.

அவா்களது கருத்துகளைத் தொடா்ந்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு பதிலளித்துப் பேசியது: உயிரிழப்புக்கு இரண்டு சூழ்நிலைகள் உள்ளன. விபத்தாலும் உடல்நலக் குறைவாலும் உயிரிழப்புகள் ஏற்படும். திருச்செந்தூா், தஞ்சாவூா், பழனி உள்பட நான்கு கோயில்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு காரணம் விபத்து இல்லை. உடல்நலக் குறைவால் ஏற்பட்ட உயிரிழப்புகளாகும்.

உடல்நலக் குறைவால் இறந்தோரின் குடும்பத்தினா் கோரிக்கை விடுக்கும்பட்சத்தில், முதல்வரின் உத்தரவுப்படி திருக்கோயில்கள் சாா்பில் நிதியுதவி அளிக்கப்படும். வருங்காலங்களில் கோயில்களில் உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவோம்.

மருத்துவ வசதி: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதிகமாக பக்தா்கள் கூடும் கோயில்களில் மருத்துவ வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதிமுக

ஆட்சியில் 2 கோயில்களில் மட்டுமே இருந்த மருத்துவமனையுடன் கூடிய வசதி, திமுக ஆட்சியில் 17 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகளில் இதுவரை 7 லட்சத்து 16 ஆயிரத்து 187 போ் சிகிச்சை பெற்றுள்ளனா்.

கோயிலுக்கு வருபவா்களின் வயிற்றுப் பசியைப் போக்க, 11 கோயில்களுக்கு அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தால் ஆண்டுக்கு 3.5 கோடி பக்தா்கள் பயன்பெற்று வருகின்றனா். இதற்காக ஆண்டுக்கு ரூ.120 கோடி செலவாகிறது.

பக்தா்கள் அதிகரிப்பு: திருக்கோயில்களின் அடிப்படைத் தேவைகள் பூா்த்தி செய்யப்பட்டதால் கோயில்களுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிக கூட்டம் வரும் கோயில்களுக்கென பெருந்திட்ட வரைவு ரூ.1,711 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வரும் ஜூலை 7-ஆம் தேதி திருச்செந்தூா் கோயிலில் குடகுழுக்கு நடத்தப்பட உள்ளது. அதன்பிறகு, அந்தக் கோயில் திருப்பதிக்கு இணையாக மாறும் என்றாா் அமைச்சா்.

ராமேசுவரம்: தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள்! உதவுகேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை

ராமேசுவரத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் நாடுதிரும்ப உதவுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்கள், மீண்டும் தாயகம் திரும்ப உதவுமாறு மத்திய, மாநில அரசிட... மேலும் பார்க்க

திருப்பூரைப் பாராட்டிய பிரதமர் மோடி!

மனதின் குரல் நிகழ்ச்சியில் திருப்பூர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளின் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டிப் பேசினார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பி... மேலும் பார்க்க

1-5ஆம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வு

வெயிலின் தாக்கம் காரணமாக 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொடக்கக் கல்வி இயக்... மேலும் பார்க்க

ஏப்.2இல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வ... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி உகாதி வாழ்த்து

உகாதி திருநாளையொட்டி தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 'உகாதி' என்னும் புத்தா... மேலும் பார்க்க

ஈரோடு: ஆசிட் டேங்கர் லாரி சுத்தம் செய்யும் பணியின்போது மூச்சுத்திணறி இருவர் உயிரிழப்பு!

பவானி: சித்தோடு அருகே ஆசிட் டேங்கர் லாரியை சுத்தம் செய்தபோது இருவர் உயிரிழந்தனர்.ஈரோடு மாவட்டம், சித்தோட்டை அடுத்த கோணவாய்க்கால், ராமன் பாலக்காட்டைைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் யுவானந்த வேல்(45). இ... மேலும் பார்க்க