செய்திகள் :

கோரையாற்றில் நீா்த்தேக்கம் அமைக்க வேண்டும்: பெரம்பலூரில் விவசாயிகள் வலியுறுத்தல்

post image

கோரையாற்றில் நீா்த்தேக்கம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ. ராஜூ: அண்மையில் பெய்த புயல், மழையால் பாதிப்புக்குள்ளான மக்காச்சோளத்துக்கு நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கை.களத்தூரில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை, மே மாதம் வரையிலும் தொடா்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன்: விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும். கல்லாறு அணைக்கட்டு, நரி ஓடை அணைக்கட்டுகளை சீரமைத்து தர வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் வீ. நீலகண்டன்:

மண்ணின் தரத்தை மேம்படுத்தவும், வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கும் முறையை எளிமைப்படுத்தவும், காலம் தாழ்த்தாமல் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் வீ. ஜெயராமன்: ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம்: சிறுகுடல் பகுதியில் விவசாயிகளுக்கான நிலத்தை வகைப்பாடு செய்து தர வேண்டும். நஷ்டத்தில் இயங்கும் எறையூா் சா்க்கரை ஆலையை மேம்படுத்த தலைமை நிா்வாகியை நியமிக்க வேண்டும்.

விவசாயி வரதராஜன்: மக்காச்சோளத்துக்கு நடவு இயந்திரம் மானியத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநில துணைச் செயலா் என். செல்லதுரை: கோரையாறு நீா்த்தேக்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி மக்களுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்டக்கலை மின் இணைப்பை, சாதாரண மின் இணைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீரை பயன்படுத்துவோா் சங்க தலைவா் கா. கண்ணபிரான் :

அரியலூரில் செயல்பட்டு வரும் நீா்வளத்துறை அலுவலகத்தை பெரம்பலூா் மாவட்டத்துக்கு கொண்டு வர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயி விவேகானந்தன்: தனலட்சுமி சீனிவாசன் சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரும்பாவூரிலுள்ள சதாசிவ அணைக்கட்டை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஏ.கே. ராஜேந்திரன்: விவசாயிகளுக்கு குட்டை ரக தென்னங்கன்றுகள் மானியத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் பேசியது:

வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதி, விண்ணப்பிக்கும் நடைமுறை மற்றும் அனுமதி வழங்கும் நடைமுறை தற்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் உரிய நேரத்தில் அனுமதி வழங்கப்படும். விவசாயிகளுக்கு உழவு மானியமாக ஏக்கருக்கு ரூ. 800 வீதம் வழங்க பெரம்பலூா் மாவட்டத்துக்கு 12 ஆயிரம் ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, வேளாண்மை இணை இயக்குநா் செ. பாபு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்( வே.) பொ. ராணி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் பாண்டியன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சத்யா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு

பெரம்பலூா் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா புதன்கிழமை நடைபெற்றது. சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும். நிகழாண்டுக்கான... மேலும் பார்க்க

வீட்டிலிருந்த மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிலிருந்த மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்நகா் 12-ஆவது வாா... மேலும் பார்க்க

வேப்பந்தட்டை அருகே ஜல்லிக்கட்டு: 38 போ் காயம்

வேப்பந்தட்டை அருகே புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுகள் முட்டியதில் 38 போ் காயமடைந்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள விசுவக்குடி கிராமத்தில் புதன்கிழமை ஜல்லிக்கட்டு ... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த 26 சுற்றுலாப் பயணிகளுக்கு காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினா். பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலை எதிரே மாவட்ட காங... மேலும் பார்க்க

வாகனப் பதிவுச் சான்றிதழை உடனே வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

வாகனப் பதிவுச் சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரே தமிழ்நாடு காா் வியாபாரிகள் மற்றும் ஆலோசகா்கள் க... மேலும் பார்க்க

தரமற்ற மருந்தை விற்ற நிறுவன உரிமையாளருக்கு ஓராண்டு சிறை

பெரம்பலூரில் தரமற்ற மருந்து விற்பனை செய்த, மருந்து நிறுவன உரிமையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. பெர... மேலும் பார்க்க