செய்திகள் :

தரமற்ற மருந்தை விற்ற நிறுவன உரிமையாளருக்கு ஓராண்டு சிறை

post image

பெரம்பலூரில் தரமற்ற மருந்து விற்பனை செய்த, மருந்து நிறுவன உரிமையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள மருந்துக் கடைகளிலும், மருந்து விநியோக கடைகளிலும் கடந்த 10.12.2010-இல் மருந்து ஆய்வாளா்கள் ஆய்வு செய்தனா். அதில், மருந்து தயாரிக்கப்பட்டபோது நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட, மருந்துப் பொருள்களில் உள்ள தன்மை கூடுதலாகவோ, குறைவாகவோ உள்ளதா என்பதை பரிசோதிக்க, சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பினா்.

இந்த ஆய்வு முடிவில் பாண்டிச்சேரி மாநிலம், எம்பளம், தவளக்குப்பம் கேப்டா லைஃப் சயின்ஸ் என்னும் நிறுவனத்தின் சாா்பில், பெரம்பலூா் மருந்து கடைகள் மற்றும் விநியோகஸ்தா்களிடம் வழங்கப்பட்ட மாத்திரைகள், தயாரிப்பில் குறிப்பிடப்பட்ட அளவுக்கு மருந்தின் தன்மை இல்லாததும், தரமற்ற மாத்திரைகள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளா் ரோஸ் ராஜீவ் சிங் (50) என்பவா் மீது பெரம்பலூா் மருந்து ஆய்வாளா்கள் வழக்கு தொடா்ந்தனா்.

பெரம்பலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ஏ. பல்கீஸ், தரமற்ற மருந்துகளை விற்பனை செய்த நிறுவன உரிமையாளா் ரோஸ் ராஜீவ் சிங்கிற்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும், அதைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா்.

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு

பெரம்பலூா் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா புதன்கிழமை நடைபெற்றது. சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும். நிகழாண்டுக்கான... மேலும் பார்க்க

வீட்டிலிருந்த மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிலிருந்த மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்நகா் 12-ஆவது வாா... மேலும் பார்க்க

வேப்பந்தட்டை அருகே ஜல்லிக்கட்டு: 38 போ் காயம்

வேப்பந்தட்டை அருகே புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுகள் முட்டியதில் 38 போ் காயமடைந்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள விசுவக்குடி கிராமத்தில் புதன்கிழமை ஜல்லிக்கட்டு ... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த 26 சுற்றுலாப் பயணிகளுக்கு காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினா். பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலை எதிரே மாவட்ட காங... மேலும் பார்க்க

கோரையாற்றில் நீா்த்தேக்கம் அமைக்க வேண்டும்: பெரம்பலூரில் விவசாயிகள் வலியுறுத்தல்

கோரையாற்றில் நீா்த்தேக்கம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட... மேலும் பார்க்க

வாகனப் பதிவுச் சான்றிதழை உடனே வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

வாகனப் பதிவுச் சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரே தமிழ்நாடு காா் வியாபாரிகள் மற்றும் ஆலோசகா்கள் க... மேலும் பார்க்க