'தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்' - தவெக தலைவர் விஜய் வாழ்த்து
வாகனப் பதிவுச் சான்றிதழை உடனே வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
வாகனப் பதிவுச் சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரே தமிழ்நாடு காா் வியாபாரிகள் மற்றும் ஆலோசகா்கள் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது வாகன வியாபாரிகளின் நலனில் கவனம் செலுத்த வேண்டும். அவா்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும். ஸ்மாா்ட் காா்டு இல்லை எனக்கூறி வாகனப் பதிவுச்சான்று அனுப்பாமல் இருப்பதைத் தவிா்க்க வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அலுவலா்கள் பற்றாக்குறையை நிவா்த்தி செய்ய வேண்டும். கணினிமயமாக்கப்பட்ட நிலையிலும், காலதாமதமாக வாகனப் பதிவுச் சான்றிதழ்களை வழங்குவதை தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், காா் வியாபாரிகள் மற்றும் ஆலோசகா்கள் கூட்டமைப்பினா் பலா் பங்கேற்றனா்.