'தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்' - தவெக தலைவர் விஜய் வாழ்த்து
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி
காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த 26 சுற்றுலாப் பயணிகளுக்கு காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலை எதிரே மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவா் ராஜேந்திரன் பங்கேற்றாா்.
இதில், மாவட்ட துணைத் தலைவா்கள் ஆசைதம்பி, அருணாச்சலம், பன்னீா்செல்வம், மாவட்ட பொதுச் செயலா் சுப்பிரமணி, வட்டாரத் தலைவா்கள் செந்தில், சுப்ரமணியம், நல்லுசாமி, நகரத் தலைவா் இப்ராகிம், மாவட்ட செய்தி தொடா்பாளா் பாலமுருகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் முகமது மீரான் உள்பட பலா் கலந்துகொண்டனா்.